டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரான தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் மகள் கவிதா, தனது 3 செல்போன்களையும் அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.
டெல்லி அரசின் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சிக்கு 100 கோடி ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்ட புகாரில் 3வது முறையாக விசாரணைக்கு ஆஜராக வந்த கவிதா தனது செல்போன்களை அமலாக்கத்துறையிடம் வழங்க உள்ளதாக தெரிவித்தார்.
எந்தவிதமான நீதிமன்ற உத்தரவும் இல்லாமல் ஒரு பெண்ணின் செல்போன்களை விசாரணைக்கு உட்படுத்தலாமா, இது ஒரு பெண்ணின் தனியுரிமையில் தலையிடுவதாக ஆகாதா என்றும் அமலாக்கத்துறைக்கு கவிதா கடிதம் மூலமாக கேள்வி எழுப்பியுள்ளார்.