கடந்த பிப்ரவரி 2023 மாதந்திர விற்பனையில் பெட்ரோல் ஸ்கூட்டர்களை விட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளது. தொடர்ந்து ஹோண்டா ஆக்டிவா முதலிடத்தில் உள்ளது.
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் முதன்மையான மாடல் என்ற பெயரை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதனை தொடர்ந்து ஐக்யூப் மற்றும் 450x போன்ற ஸ்கூட்டர்கள் உள்ளன. சமீபத்தில் விற்பனைக்கு வந்த ஹீரோ ஜூம் ஸ்கூட்டர் 7214 யூனிட்டுகள் விற்பனை ஆகியுள்ளது.
டாப் 10 ஸ்கூட்டர்கள் – பிப்ரவரி 2023
டாப் 10 | பிப்ரவரி 2023 | பிப்ரவரி 2022 |
1. ஹோண்டா ஆக்டிவா | 1,74,503 | 1,45,317 |
2. டிவிஎஸ் ஜூபிடர் | 53,891 | 47,092 |
3. சுசூகி ஆக்செஸ் | 40,194 | 37,512 |
4. ஓலா | 17,694 | 3,910 |
5. டிவிஎஸ் என்டார்க் | ,17,124 | 23,061 |
6. டிவிஎஸ் ஐக்யூப் | 15,522 | 2,238 |
7. ஹோண்டா டியோ | 14,489 | 15,487 |
8. ஏதெர் 450X | 12,147 | 2,178 |
9. ஹீரோ டெஸ்ட்னி | 8,232 | 674 |
10. ஹீரோ ஜூம் | 7,214 | – |
டாப் 10 ஸ்கூட்டர்களில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ்1 எஸ்1 புரோ மற்றும் எஸ்1 ஏர் உள்ளிட்ட மாடல்களுடன் டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் ஏத்தர் 450 எக்ஸ் போன்ற மாடல்கள் சிறப்பான வரவேற்பினை பெற்று வருகின்றது.