2023-24ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், தக்காளி உற்பத்தி திறனை அதிகரிக்க ரூ.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில், 2023-24ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நேற்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட்டை, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார். விவசாயிகளின் அடையாளமாக கருதப்படும் பச்சைத் துண்டை அணிந்து வந்த அமைச்சர், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
இதில் தக்காளியின் உற்பத்தித் திறனை அதிகரிக்க, சொட்டு நீர்ப் பாசனம் அமைத்தல், தடுக்கு அமைத்தல், அதிக மகசூல் தரும் இரகங்களைப் பயிரிடுதல், மூடாக்கு இடுதல் போன்ற உத்திகள் ஊக்குவிக்கப்படும். இத்திட்டம் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திண்டுக்கல், தேனி. திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் 19 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.