பிரித்தானியாவைச் சேர்ந்த 104 மூதாட்டி ஒருவர், தன்னுடைய 102 ஆண்டுகள் வாழ்ந்த வீட்டை விற்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
100 ஆண்டுகள் பழமையான வீடு
சோமர்செட்டைச் சேர்ந்த 104 வயது மூதாட்டி நான்சி ஜோன் கிஃபோர்ட். இவர் 1921ஆம் ஆண்டில் தனது இரண்டு வயதில் இருந்து வசித்து வரும் வீட்டை விற்க உள்ளார்.
தனது உடல்நிலை மோசமடைந்ததால் தற்போது இருக்கும் வீட்டை விற்றுவிட்டு, கிளாஸ்டன்பரியில் உள்ள முதியோர் இல்லத்திற்கு செல்ல நான்சி முடிவெடுத்துள்ளார்.
@PA
104 வயது மூதாட்டி
102 ஆண்டுகளுக்கு முன்பு நான்சியின் குடும்பம் 200 பவுண்டுகளுக்கு அந்த வீட்டை வாங்கியது. தற்போது நாணயத்தில் தோராயமாக அந்த வீட்டின் விலை 10,000 பவுண்டுகளாக உள்ளது.
எஸ்டேட் முகவரின் கூற்றுப்படி இந்த வீடு 1882ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
முதலாம் உலகப்போர் முடிந்து சில மாதங்களில் பிறந்த நான்சி, 100 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்த தனது வீட்டை தற்போது விற்க முன்வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
@PA
மேலும், 102 ஆண்டுகள் ஒரே வீட்டில் வாழ்வது என்பது அரிதான விடயம் என்றாலும், 104 வயது வரை பெரும்பாலும் நபர்கள் அதிகம் வாழ்வது இல்லை என்று கூறப்படுகிறது.
@PA
@PA