130 பேருக்கு 10 கிராம் தங்கம் கொடுத்த கீர்த்தி சுரேஷ்
தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். தெலுங்கில் நானி ஜோடியாக அவர் நடித்துள்ள படம் 'தசரா'. இந்த மாதம் 30ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
'தசரா' படம் கீர்த்தியின் மனதிற்கு நெருக்கமான ஒரு படமாக அமைந்துள்ளதாம். படப்பிடிப்பு முடிந்த அன்று குழுவை விட்டுப் பிரிவதை நினைத்து மிகவும் வருந்தினாராம். வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் தனது மனதைக் கவர்ந்த படம் கதாபாத்திரம் என்பதால் படத்தில் பணியாற்றிய 130 பணியாளர்களுக்கு தலா 10 கிராம் தங்கம் பரிசளித்துள்ளாராம். தற்போதைய தங்க விலையில் மொத்தமாக 75 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளார்.
இதற்கு முன்பு தெலுங்கில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'மகாநடி' படத்தில் நடித்து முடித்த போதும் படக்குழுவினருக்கு தங்கம் பரிசளித்தார் கீர்த்தி என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.