கோடீஸ்வரரான ஊடகத்துறை ஜாம்பவான் ஒருவர் தனது 92ஆவது வயதில் ஐந்தாவது முறையாக திருமணம் செய்ய இருக்கிறார்.
பிரித்தானிய வம்சாவளியினர்
பிரித்தானிய வம்சாவளியினரான Rupert Murdoch (92), அவுஸ்திரேலியாவில் பிறந்தவர்.
தற்போது அவர் அமெரிக்கக் குடிமகன் ஆவார்.
உலக நாடுகள் பலவற்றில் பல்வேறு ஊடக நிறுவனங்களை நடத்திவருகிறார் Rupert Murdoch.
2022ஆம் ஆண்டு நிலவரப்படி, அவரது சொத்து மதிப்பு 21.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
REUTERS
ஐந்தாவது முறையாக திருமணம்
Rupert Murdoch, 1956ஆம் ஆண்டு, Patricia Booker என்னும் பெண்ணை திருமணம் செய்தார். தம்பதியருக்கு ஒரு மகள். 1967ஆம் ஆண்டு தம்பதியர் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்கள்.
1967ஆம் ஆண்டு, Anna Torv என்னும் பெண்ணை திருமணம் செய்தார் Rupert. தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள். 1999ஆம் ஆண்டு தம்பதியர் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
1999ஆம் ஆண்டு, தனது இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்த 17 நாட்களுக்குப் பின், சீனாவில் பிறந்தவரான Wendi Deng என்னும் பெண்ணை திருமணம் செய்துகொண்டார் Rupert. பல பிரச்சினைகளுக்குப் பின் பிரித்தானிய முன்னாள் பிரதமரான டோனி பிளேருக்கும் தனது மனைவிக்கும் தவறான உறவு இருப்பதாக Rupertக்கு சந்தேகம் ஏற்பட்டது.
தம்பதியருக்கு இரண்டு மகள்கள். 2013ஆம் ஆண்டு Rupert விவாகரத்துக்கு விண்ணப்பித்ததாக அவரது அலுவலக செய்தித்தொடர்பாளர் ஒருவர் அறிவித்தார்.
JENNA BASCOM PHOTOGRAPHY
2016ஆம் ஆண்டு, Jerry Hall என்னும் முன்னாள் மொடலை திருமணம் செய்தார் Rupert. 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் அந்த திருமணமும் முடிவுக்கு வந்தது.
பின்னர் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், Ann Lesley Smith என்னும் பெண்ணை சந்தித்தார் Rupert.
இம்மாதம் 17ஆம் திகதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது. விரைவில் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள்.
இந்த கோடை இறுதியில் தம்பதியருக்கு திருமணம் நடைபெற உள்ளது.
66 வயதாகும் Ann, 14 ஆண்டுகளுக்கு முன் கணவனை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.