கர்நாடகாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை அனு பிரபாகர். கன்னட படங்களின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான அனு பிரபாகர், தமிழில் அற்புதம், மஜா, அன்னை காளிகாம்பாள் ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். நடிகை அனு பிரபாகர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கன்னட சினிமாவில் நடித்து வருகிறார் அனு பிரபாகர்.
அனு பிரபாகர் கன்னட நடிகை ஜெயந்தியின் மகன் கிருஷ்ணகுமார் என்பவரை கடந்த 2002ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 12 வருடங்கள் அனு பிரபாகரும் கிருஷ்ண குமாரும் கடந்த 2014ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.
பின்னர் நடிகை அணு பிரபாகர் நடிகர் ரகு முகர்ஜியை காதலித்தார்.
Dhanush: என் குடும்பம் இந்த நிலைமைக்கு வந்ததுக்கு காரணம் அவர்தான்… தனுஷ் உருக்கம்!
ரகு முகர்ஜி ஏற்கனவே தீபா என்பவரை திருமணம் செய்து அவரை விவாகரத்து செய்தார். பின்னர் பாவனா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து அவரையும் விவாகரத்து செய்தார். 2016 ஆம் ஆண்டு நடிகை அனு பிரபாகரை மூன்றாவது திருமணம் செய்தார் ரகு முகர்ஜி. இவர்கள் இருவருக்கும் நந்தனா என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் தனது முதல் கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணத்தை 12 ஆண்டுகளுக்கு பிறகு பேசியுள்ளார் நடிகை அனு பிரபாகர். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், என்னை பற்றி இணையதளத்தில் தேடினால் அதில் எனது விவாகரத்து குறித்த தகவல்களும், என்னை பற்றிய நெகட்டிவான செய்திகளுமே அதிகம் இருக்கும்.
Meena:இரண்டாம் திருமணமா? நடிகை மீனா விளக்கம்!
இதுவரை என் விவாகரத்து குறித்து நான் பேசியதில்லை. தற்போது முதல் முறையாக அதுகுறித்து பேசுகிறேன். நடிகை ஜெயந்தியின் மகன் கிருஷ்ணகுமாருடன் திருமணம் நடந்தபோது முதலில் அவர்கள் என்னை நன்றாக கவனித்துக்கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் நடிப்பதை கைவிடக்கூடாது என்று நடிகை ஜெயந்தி என்னிடம் தெரிவித்தார்.
முதலில் கண்ணியமான உடைகள் அணிய கூறிய அவர் பின்னர் ரொம்பவே மாடர்னான உடைகளை அணியுமாறு வற்புறுத்தினார். கணவன், மனைவிக்குள் 3ஆம் நபர் வருவதை நான் விரும்பவில்லை. இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். ஒரே ஒரு வாழ்க்கை அதை மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் வாழ வேண்டும். மனதில் வலியோடு வாழக்கூடாது. அதனால்தான் முதல் திருமண பந்தத்தை முறித்துக்கொண்டேன் என உருக்கமாக கூறியுள்ளார்.
Robo Shankar: ரோபோ ஷங்கர் திடீரென எடை குறைந்ததற்கு காரணம் இதுவா? மனம் திறந்த மனைவி!