பிரபல வில்லன் நடிகரான கோட்டா சீனிவாச ராவ் மரணமடைந்து விட்டதாக வதந்தி பரவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டா சீனிவாச ராவ்ஆந்திர மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். தெலுங்கில் பல படங்களில் குணசித்திர வேடத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர். தெலுங்கு சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள கோட்டா சீனிவாச ராவ், தமிழ், மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
Mahalakshmi:ப்பா… பட்டு சேலையில் செஞ்சி வச்ச சிலை போல் இருக்கும் மகாலட்சுமி… லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
சாமி படத்தில் வில்லன்சுமார் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கோட்டா சீனிவாச ராவ். தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் நடித்த ‘சாமி’ படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் சாதிய வில்லனாக மிரட்டியிருந்தார் கோட்டா சீனிவாச ராவ். இந்த படத்தைத் தொடர்ந்து இவர் தமிழில் ‘திருப்பாச்சி’, ‘கோ’, ‘சகுனி’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
Actor: பெரிய வீட்டு மருமகளை கடைசி வரை ஒருதலையாக காதலித்த லவ் ஃபெயிலியர் நடிகர்!
சொக்க தங்கம் ஜூவல்லரிமேலும் கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம் ஆகியோரது நடிப்பில் வெளியான ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் நகைக்கடை உரிமையாளராக நடித்துள்ளார் கோட்டா சீனிவாச ராவ். அதில் சொக்க தங்கம் சொக்க தங்கம் ஜூவல்லரி என சந்தானத்தை மும்பை மாடல் அழகி என நினைத்து ஜொள்ளு விடுவார் கோட்டா சீனிவாச ராவ். அவரது கதாப்பாத்திரம் ரசிக்க வைத்தது. Dhanush: என் குடும்பம் இந்த நிலைமைக்கு வந்ததுக்கு காரணம் அவர்தான்… தனுஷ் உருக்கம்!
இறந்துவிட்டதாக வதந்திஇந்நிலையில், இன்று காலை கோட்டா சீனிவாச ராவ் இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று தீயாய் பரவி வருகிறது. இதனைக் கேட்ட ரசிகர்கள் பலரும் சமூக வலதளங்களில் கோட்டா சீனிவாச ராவுக்கு இரங்கல் தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகர் கோட்டா சீனிவாச ராவ்.
திருமணத்திற்கு பிறகு ‘அதை’ கைவிட்ட மகாலட்சுமி!
அரசியல்அந்த வீடியோவில் தான் நலமுடன் இருப்பதாகவும், தன்னை பற்றி பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார். கோட்டா சீனிவாச ராவ் நடிகராக மட்டுமின்றி அரசியல்வாதியாகவும் உள்ளார். 1999 ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை விஜயவாடா கிழக்கு தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார் நடிகர் கோட்டா சீனிவாச ராவ்.
Meena:இரண்டாம் திருமணமா? நடிகை மீனா விளக்கம்!
Kota Srinivasa Rao