அண்மையில் நகைச்சுவை நடிகர் மயில்சாமி திடீரென உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்த சோகம் குறைவதற்கு முன்பாகவே பிரபல மிமிக்ரி கலைஞரும், நகைச்சுவை நடிகருமான கோவை குணா உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரையில் ஒளிப்பரப்பான நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பல கலைஞர்கள் பிரபலமாகியுள்ளனர். அந்த லிஸ்டில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மிமிக்ரி கலைஞரான கோவை குணா.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
சிவாஜி கணேசன், கவுண்டமணி உள்ளிட்ட பிரபல நடிகர்கள் போல் அப்படியே பேசக்கூடியவர் குணா. குறிப்பாக எம்.ஆர். ராதாவை போல் அப்படியே பேசக்கூடியவர் இவர். சன் டிவியில் ஒளிப்பரப்பான ‘அசத்த போவது யாரு’ நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டுள்ளார்.
ஆண்டவர் தயாரிப்பில் உதயநிதி நடிக்கவிருந்த படத்தின் கதை இதுவா.?: கமலின் வேறலெவல் திட்டம்.!
கடந்த சில காலமாக குணா உடல்நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் நகைச்சுவை நடிகர் மயில்சாமி உயிரிழந்த போது மிமிக்ரி கலைஞர்கள் ஒன்றுக்கூடி அஞ்சலி செலுத்திய நிகழ்வில், கோவை குணாவும் அதில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இறப்பதற்கு முன் மயில்சாமி வைத்திருந்த பணம் எவ்வளவு தெரியுமா.?: கலங்க வைக்கும் தகவல்.!