Niharika Konidela, Chaitanya separation: நிஹாரிகா கொனிடெலாவும், அவரின் கணவர் சைதன்யாவும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடர்வதை நிறுத்திவிட்டார்கள்.
நிஹாரிகாமெகாஸ்டார் சிரஞ்சீவின் தம்பி நாகேந்திர பாபுவின் மகள் நிஹாரிகா கொனிடெலா. விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படம் மூலம் கோலிவுட் வந்தார். ஒக்க மனசு படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். 2016ம் ஆண்டு பெரிய திரைக்கு வந்த நிஹாரிகா 2019ம் ஆண்டு வரை மொத்தம் 5 படங்களில் தான் நடித்தார். இந்நிலையில் அவருக்கும், குண்டூர் ஐ.ஜி.யின் மகன் சைதன்யாவுக்கும் 2020ம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணம்அரண்மனையில் ஐஜி மகனை திருமணம் செய்த மெகா குடும்பத்து நடிகைநிஹாரிகா, சைதன்யாவின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இருக்கும் உதய்நிவாஸ் அரண்மனையில் பிரமாண்டமாக நடந்தது. தனி விமானம் மூலம் அவர்கள் உதய்பூருக்கு சென்றார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகின. இந்நிலையில் நிஹாரிகாவும், சைதன்யாவும் பிரிந்துவிட்டதாக ரசிகர்கள் பேசத் துவங்கியிருக்கிறார்கள்.
பிரிவுநிஹாரிகாவுக்கும், சைதன்யாவுக்கும் இடையே பிரச்சனையாக இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் பேச்சு அடிப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் சைதன்யாவை பின்தொடர்வதை நிறுத்திவிட்டார் நிஹாரிகா. சைதன்யாவும் இன்ஸ்டாகிராமில் நிஹாரிகாவை பின்தொடர்வதை நிறுத்திவிட்டார். இதனால் அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என பேசப்படுகிறது.
நீக்கம்நிஹாரிகாவை பின்தொடர்வதை நிறுத்தியதோடு மட்டும் அல்லாமல் தங்கள் திருமண புகைப்படங்களையும் நீக்கிவிட்டார் சைதன்யா. திருமண புகைப்படங்களை நீக்கிவிட்டார் என்றால் இது விவாகரத்து தான் என சமூக வலைதளவாசிகள் பேசிக் கொள்கிறார்கள். நல்லா இருந்த கணவன், மனைவி இப்படி பிரியும் அளவுக்கு என்ன நடந்தது என தெரியவில்லையே என மெகா குடும்பத்து ஆதரவாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இல்லைஇன்ஸ்டாகிராமில் சைதன்யாவை பின்தொடர்வதை நிறுத்திவிட்டாலும், திருமண புகைப்படங்களை நிஹாரிகா நீக்கவில்லை. திருமணத்திற்கு பிறகு சைதன்யாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களையும் அவர் நீக்கவில்லை. இதை எல்லாம் பார்த்த ரசிகர்கள் நாக சைதன்யா, சமந்தா பற்றி பேசி வருகிறார்கள்.
சமந்தாநாக சைதன்யாவை பிரிந்த பிறகு அவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கினார் சமந்தா. ஆனால் சமந்தாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை நாக சைதன்யா இதுவரை நீக்கவில்லை. இங்கு நாக சைதன்யா போன்று அங்கு நிஹாரிகா. சைதன்யாவும், நிஹாரிகாவும் மீண்டும் சேர வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
Leo Vijay:கவிதை பாடிய விஜய், வெட்கப்பட்டு சிரித்த பிரபலம்: லியோ ஷூட்டிங்ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்யம்
சைதன்யாநிஹாரிகாவின் கணவரான சைதன்யா ஜொன்னலகட்டா ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். அவர் குண்டூர் ஐ.ஜி. எம். பிரபாகர் ராவின் மகன் ஆவார். பிட்ஸ் பிலானி, இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் படித்தவர். ஹைதராபாத்தில் இருக்கும் எம்.என்.சி.யில் பிசினஸ் ஸ்ட்ராடஜிஸ்டாக வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.