மணிரத்னம் இயக்கத்தில் சீயான் விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, பிரகாஷ்ராஜ், ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் படம் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி ரிலீஸாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.
Leo Vijay:கவிதை பாடிய விஜய், வெட்கப்பட்டு சிரித்த பிரபலம்: லியோ ஷூட்டிங்ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்யம்
முதல் பாகத்தில் வந்தியத்தேவன், குந்தவை இடையேயான காதல் காட்சிகள் எதுவும் இல்லை. இரண்டாம் பாகத்தில் அவர்களின் காதல் தான் ஹைலைட்டாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அகநக பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. குந்தவை பிராட்டி, வந்தியத்தேவன் இடையேயான கெமிஸ்ட்ரி தான் இந்த பாடலின் சிறப்பே.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இளங்கோ கிருஷ்ணன் எழுதிய அகநக பாடலை சக்திஸ்ரீ கோபாலன் பாடியிருக்கிறார். முதல் பாடலே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.
இந்நிலையில் ட்விட்டரில் இளைய பிராட்டி குந்தவையிடம் பேசத் துவங்கிவிட்டார் வந்தியத்தேவர். இளையபிராட்டிக்கு ஹாய் சொல்லி ட்வீட் போட்டார், ஆனால் அவரோ பதில் அனுப்பவில்லை. இதையடுத்து என்ன பதிலே இல்லை என்று மீண்டும் ட்வீட் செய்தார் வந்தியத்தேவர்.
இளையபிராட்டி காஷ்மீரில் பிசியாக இருப்பதால் பதில் சொல்ல தாமதமாகிவிட்டது போன்று. இதையடுத்து என்ன வாணர்குல இளவரசே என கேட்டார் குந்தவை. தங்கள் தரிசனம் கிடைக்குமா என தன் வேலையை ஆரம்பித்துவிட்டார் வந்தியத்தேவன்.
ம்ம்ம்..யோசித்து செய்தி அனுப்புகிறேன் என குந்தவை சொல்ல, கடல் கடந்து சென்று உங்கள் ஆணையை நிறைவேற்றிவிட்டு வருபவனுக்கு மோரை மட்டும் கொடுத்து அனுப்பி விடமாட்டீர்களே.. ? என கேட்டார் வந்தியத்தேவன்.
அந்த ட்வீட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,
மோர் இல்லைனா பீர் வேண்டுமா வந்தியத்தேவரே?. அண்டா மூடி நிறைய பிரியாணி சாப்பிட்டவரை மோர் கேட்க வைத்துவிட்டார்களே. மோர் மட்டும் வேணாம்னா மிளகாயும், வெங்காயமும் கொடுக்கட்டுமா?நண்பனோட ராஜ்ஜியத்த ரூட் விட சொன்னா நண்பனோட தங்கச்சிக்கு ரூட்டு விட்ரவன் தான்டா உண்மையான இளந்தாரிப்பய என தெரிவித்துள்ளனர்.
சோழர்களின் ட்வீட்டுகளை பார்த்த பாண்டியர்களின் ரியாக்ஷனை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
இது தான் பாண்டிய நாட்டு ரியாக்ஷன்.
குந்தவை த்ரிஷாவும், வந்தியத்தேவர் கார்த்தியும் ட்வீட் செய்வது எல்லாம் சரி தான். ஆனால் ட்விட்டரில் கார்த்தியை த்ரிஷா ஃபாலோ பண்ணவில்லை என்பதை ரசிகர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள். இதெல்லாம் அநியாயம் இளையபிராட்டி என்கிறார்கள். தற்போது தலைப்பை மீண்டும் வாசிக்கவும்.
பாலிவுட் நடிகர்கள் மனோஜ் பாஜ்பாய், ஆயுஷ்மான் குரானா, டொவினோ தாமஸ், தனுஷ், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், விஷால், வெங்கட் பிரபு, நிவின் பாலி, உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, ஜெயம் ரவி ஆகிய நடிகர்களை மட்டும் தான் ட்விட்டரில் ஃபாலோ பண்ணுகிறார் த்ரிஷா. இதையடுத்தாவது வந்தியத்தேவன் கார்த்தியை த்ரிஷா ட்விட்டரில் பாலோ பண்ணுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதற்கிடையே நாங்களே பாதிரியாரின் வீடியோ கிடைக்கவில்லையே என்கிற கடுப்புல இருக்கோம், இவர் வேர மோரு, பீருனு பேசிக்கிட்டு இருக்காரு என ஒரு சிலர் கடுப்பாகியிருக்கிறார்கள்.