தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணி முதல் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான விவசாயிகளுக்கான தனி வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
அந்த வகையில் இது திமுக பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யும் 3வது வேளாண் பட்ஜெட் ஆகும். பச்சைத் துண்டு அணிந்துவந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
23 லட்சம் இலவச மின் இணைப்பு வழங்க ரூ.6536 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும்.
ரூ.14 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்கப்படும்.
25 உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும்.
21 மாவட்டங்களில் பலா சாகுபடியை 2,500 ஹெக்டேரில் உயர்த்திட ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
பள்ளி மாணவர்கள் வேளாண்மையை அறிந்துகொள்ள ரூ.1 கோடியில் பண்ணைச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படும்.