இந்தாண்டுக்கான பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று வழங்கினார்.
டெல்லி ராஷ்டிர பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தங்கர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னாள் கர்நாடக முதலமைச்சரான எஸ்.எம்.கிருஷ்ணாவிற்கு பத்ம விபூஷணும், தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லாவிற்கு பத்ம பூஷண் விருதையும் குடியரசுத் தலைவர் வழங்கினார். இதையடுத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த பாம்பு பிடி வல்லுநர்களான வடிவேல், மாசிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
மேலும், பரதநாட்டியக் கலைஞர் கல்யாண சுந்தரம் பிள்ளைக்கும், மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமிக்கும் பத்மஸ்ரீ விருதினை குடியரசுத் தலைவர் வழங்கினார்.