சென்னை: காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஞ்சிபுரத்தை அடுத்த வளதோட்டம் பகுதியில் செயல்பட்ட தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை குடோனில்,இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் பலியானார்கள் என்ற செய்தி அறிந்து மிகவும் துயறுற்றேன்.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். வெடி விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், மரணமடைந்தவர்கள் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அரசை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தை அடுத்த வளதோட்டம் பகுதியில் செயல்பட்ட தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை குடோனில்,இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் பலியானார்கள் என்ற செய்தி
அறிந்து மிகவும் துயறுற்றேன்.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.1/2