அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்த முக்கிய புள்ளி! ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைவு!

திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அதிமுகவை சேர்ந்த செங்கோட்டை நகர்மன்றத் தலைவர் ராமலட்சுமி இன்று தன்னை திமுகவில் இணைத்து கொண்டார்.

இது குறித்து திமுக தலைமை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “முதல்வர் முன்னிலையில், இன்று ( மார்ச் 22 ) அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், அதிமுகவைச் சேர்ந்த தென்காசி தெற்கு மாவட்டம், செங்கோட்டை நகர்மன்றத் தலைவர் ராமலட்சுமி அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

அதுபோது, கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் சிவ.பத்மநாதன், இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலையச் செயலாளர்கள் பூச்சி எஸ்.முருகன், துறைமுகம் காஜா, மற்றும் செங்கோட்டை நகரச் செயலாளர் ஆ.வெங்கடேசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பூ.ஆறுமுகச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் கென்னடி, பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் காசிதர்மம்துரை, நகர்மன்ற உறுப்பினர் பேபி ரஜப்பாத்திமா ஆகியோர் உடனிருந்தனர்.” இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.