மதுரையில் வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேசநேரி கிராமத்தில் 50 சென்ட் அரசு நிலத்தை முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் ரத்தினசாமி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் ஆக்கிரமிப்பை மீட்கும் முயற்சியில் கள்ளிக்குடி தாசில்தார் சுரேந்திரன் ஈடுபட்டுள்ளார்.
இதுதொடர்பாக, ரத்தினசாமி தனது ஆதரவாளர்களுடன் கள்ளிக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று தாசில்தாருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ வெளியானது. இதுகுறித்து, நேசநேரி விஏஓ கொடுத்த புகாரின் பேரில் கொலை மிரட்டல் விடுத்தல், அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.