ஆசிரியர்களுக்கான விசேட அறிவிப்பு!


ஆரம்ப நிலை ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சு இன்று அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய ஆரம்ப நிலை ஆசிரியர்களின் இடமாற்றக் கடிதங்கள் இன்று (21.03.2023) தபாலில் அனுப்பி வைக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இடமாற்றம் தொடர்பான விபரம்

நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றின் ஊடாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களுக்கான விசேட அறிவிப்பு! | A Special Notice To Teachers

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,பிள்ளைகளின் கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர் இடமாற்றங்கள் இடம்பெற்றால் மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த மூன்று வருடங்களில் 8,893 ஆசிரியர் இடமாற்றங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

You may like this video



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.