வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கால அவகாசத்தை, அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த, 2021ல் பார்லி.,யில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் விதிகள் திருத்தச் சட்டம் 2021ன்படி, வாக்காளர் அடையாள அட்டையின் தகவல்களை, ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயம் இல்லை என்றாலும், ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளராக பதிவு செய்வதை தடுப்பது உள்ளிட்ட தகவல்களை சேகரிக்க உதவும் என்பதால் இதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையம், இப்பணியை கடந்த 2021ல் ஆக., 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தியது. இதற்கான காலக்கெடு இந்த வருடம் மார்ச் 31ம் தேதிக்குள் நிறைவடைய இருந்தது.இந்நிலையில், மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘ஆதார் – வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதற்கான கால அவகாசம், 2024, மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement