ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், அவர் கைதானதை போல் போலி புகைப்படங்கள் அந்நாட்டு சமூக வளைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
தன்னோடு நெருக்கமாக இருந்ததை பற்றி வாய் திறக்காமல் இருக்க பிரபல ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு, டொனால்டு டிரம்ப் தேர்தல் நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
தான் கைது செய்யப்பட்டால் தனக்காக போராடுமாறு ஆதரவாளர்களுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். இதனால், கடந்த 2 தினங்களாக நியூயார்க்கிலும், வாஷிங்டனிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.