இந்திய ஹாக்கி அணி வீராங்கனை ராணி ராம்பால் பெயர் ஹாக்கி மைதானம் ஒன்றுக்கு சூட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இவ்வித கவுரவத்தை பெற்றுள்ள முதல் வீராங்கனையாகியுள்ளார் அவர். உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியில் அமைந்துள்ள MCF ரேபரேலி மைதானம்தான் இப்போது அவரது பெயரில் மாற்றப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் அவர் பங்கேற்றிருந்தார்.
“ஹாக்கி விளையாட்டில் எனது பங்களிப்பை சிறப்பிக்கும் வகையில் MCF ரேபரேலி ஹாக்கி மைதானத்தை ‘ராணி’ஸ் கேர்ள்ஸ் ஹாக்கி டர்ஃப்’ என்று மறுபெயரிட்டதை நான் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உணர்வை வெளிப்படுத்த எனக்கு வார்த்தைகள் போதவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.