பாதுகாப்பு அமைச்சின் புதிய இராணுவ இணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பிரிகேடியர் தம்மிக்க வெலகெதர RSP USP psc IG அவர்கள் தனது கடமைகளை நேற்று (21) பொறுப்பேற்றுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரியாக இதுவரை காலம் சேவையாற்றிய மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார அவர்கள் இடமாற்றம் பெற்றுச்சென்றதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு துணை பாதுகாப்பு இணைப்பு அதிகாரியாக சேவையாற்றிய பிரிகேடியர் வெலகெதர நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரிகேடியர் வெலகெதர அவர்கள் 33 வருடங்களுக்கும் மேலாக தாய் நாட்டிற்காக சேவையாற்றி வருவதுடன், இலங்கை இராணுவத்தில் பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.