கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்த்துகல் அணியுடன் களமிறங்குவதன் மூலம் சர்வதேச கால்பந்து வரலாற்றில் அதிக போட்டி விளையாடி வீரராக சாதனை படைக்கவுள்ளார்.
உலக கோப்பையில் தவறவிட்ட சாதனை
கத்தார் நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியில் கால் இறுதிச் சுற்றில் போர்த்துகல் அணி வெளியேறியது.
இப்போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தால் சர்வதேச அளவில் அதிக போட்டிகள் ஆடிய கால் பந்து வீரர் என்ற சாதனையை முறியடித்திருப்பார்.
@afp
தற்போது நடக்கவுள்ள Euro 2024 கால்பந்து போட்டியில் ரொனால்டோ(cristiano ronaldo) போர்ச்சுக்கல் அணிக்காக விளையாடினால் அவர் 197 போட்டிகளில் ஆடி உலகில் அதிக கால்பந்து போட்டியில் ஆடிய வீரர் எனும் சாதனையைப் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
படார் அல்-முடாவா
இதற்கு முன்பாக குவைத் நாட்டின் வீரரான படார் அல்-முடாவா(bader al-mutawa) என்பவர் 196 போட்டிகளில் ஆடியுள்ளார். ஆனால் அவர் இன்னும் விளையாடிக்கொண்டு தான் இருக்கிறார்.
@afp
அவர் தொடர்ந்து ஆசியக் கால்பந்து போட்டிகளில் ஆட வாய்ப்புள்ளது.
அப்படியில்லை என்றால் 38 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ அந்த சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
@forbes
அடுத்த ஆண்டு ஜீன் மாதத்தில் நடைபெறவுள்ள Euro 2024 கால்பந்து போட்டியில் போர்ச்சுக்கள் அணியின் சார்பாக ரொனால்டோ ஆடினால் 197 போட்டிகளில் ஆடிய வீரராக உலக சாதனை செய்வார் என அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
@forbes
மேலும் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடுத்த Euro 2024 கால்பந்து போட்டியில் ஆடினால் ஈரோ கோப்பையில் போர்ச்சுக்கல் அணிக்காக அதிக முறை கேப்டனாக இருந்த சாதனையும் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.