ஊழல் மோசடி குற்றச்சாட்டில் மட்டக்களப்பு முன்னாள் காணி ஆணையாளர் பணி நீக்கம்! (photos)


மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின்  முன்னாள் பணிப்பாளர் அவர்களை பணியில் இருந்து நீக்குவதாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிலந்த விஜேசிங்க அறிவித்துள்ளார். 

முன்னாள்  ஆணைக்குழு பணிப்பாளர்  மீது சுமத்தப்பட்ட ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் உண்மை எனவும் அவரை குற்றவாளியாக கருதி காணி சீர்திருத்த ஆணைக்குழு
மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பணி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் முன்னாள் ஆணைக்குழு பணிப்பாளர்  அவர்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல் மோசடி குற்றச்சாட்டில் மட்டக்களப்பு முன்னாள் காணி ஆணையாளர் பணி நீக்கம்! (photos) | Corruption Fraud Land Commissioner Sacked

குறித்த  கடிதத்தில் குறிப்பிடப்பட்டதாவது, ‘குற்றப்பத்திரிகை மற்றும் 17 மார்ச் தொடங்கி 2021 வரை இலக்கம் I – V வரை
உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் நீங்கள் குற்றவாளி
என கண்டறியப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ அடையாள அட்டை

இதன்படி, உங்களை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர்
பதவி மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் சேவையிலிருந்தும் உடனடியாக
நீக்குவதற்கு 24.02.2023 அன்று ஆணைக்குழு தீர்மானித்துள்ளதென இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

நிர்வாக உதவியாளரான  சி.சுரேந்திரனிடம் கடமைகள், உடமைகள் மற்றும்
உத்தியோகபூர்வ அடையாள அட்டையை ஒப்படைக்க ஏற்பாடு செய்யுமாறு உங்களுக்குத்
தெரிவித்துக் கொள்கிறேன். எனவும், இலங்கை காணி சீர்திருத்த ஆணைக்குழு தலைவர்
சட்டத்தரணி நிலந்த விஜேசிங்க அவர்களினால் கடிதம் மூலம் முன்னாள் ஆணைக்குழு பணிப்பாளர் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல் மோசடிகள்

மேலும், கடந்த பல வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற காணி சீர்திருத்த
ஆணைக்குழுவின் கீழ் இருந்த பல ஏக்கர் காணிகள் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு
விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில்  மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக
கடமையாற்றிய  முன்னாள் காணி ஆணையாளர்  பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த காணி ஊழல் மோசடிகளில் தொடர்புடைய பல அதிகாரிகள் மீது
நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடதக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.