மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆர்யா பார்வதி. மலையாள தொலைக்காட்சி தொடர்களில் தொடர்களில் நடித்து பிரபலமானார் ஆர்யா பார்வதி. ஆர்யா பார்வதி கல்லூரியில் படிக்கும் போது மோகினியாட்டத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் வெற்றி பெற்றவர்.
Khushbu Sundar: சுத்திப்போடுங்க மேடம்… சுந்தர் சி குஷ்புவின் ரொமான்டிக் க்ளிக்ஸ்!
இதனை வைத்து தான் சீரியல்களில் பெரும் பிரபலமானார் நடிகை ஆர்யா பார்வதி. நடிகை ஆர்யா பார்வதி சினிமாவிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஆர்யா பார்வதியின் தாயாருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. இதனைக் கேட்ட ஆர்யா பார்வதியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருமண வயதில் மகள் இருக்கும் போது குழந்தை பெற்றிருக்கிறாரே என பேசு பொருளானது. இந்நிலையில் ஆர்யா பார்வதி கர்ப்பமாக இருக்கும் தாயாரின் வயிற்றில் சாய்ந்திருக்கும் புகைப்படத்தை தற்போது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் முதலில் அதிர்ச்சி அடைந்த நான், இப்போது மகிழ்ச்சியாக உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Ajith: நன்றியே இல்லாத ஆள் அஜித்… பிரபல நடிகர் ஆவேசம்!
மேலும் அவர் பதிவிட்டிருப்பதாவது, எனது தாயார் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததும் இதனை என்னிடம் சொல்ல அப்பாவும், அம்மாவும் தயங்கினார்கள். இந்த விஷயத்தை நான் எப்படி எடுத்து கொள்வேன் என்று குழப்பம் அடைந்தனர். ஆனால் இதனை என்னிடம் சொல்லாமல் நீண்ட நாள் மறைக்க முடியாது என்பதால் அவர்கள் அதனை தயக்கத்துடன் என்னிடம் சொன்னார்கள்.
Jeevitha: நாங்க எப்போ வேணாலும் ரூம்முக்கு வருவோம்.. அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்ட இயக்குநர்.. பிரபல நடிகை திடுக்!
என் பெற்றோர் இந்த விஷயத்தை கூறியதும் முதலில் எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அதன்பின்பு எதார்த்தத்தை புரிந்து கொண்டேன். இதற்காக நான் ஏன் வெட்கப்பட வேண்டும் என என்னை நானே கேட்டுக்கொண்டேன். எனது தயக்கம் உடைந்ததும் அடுத்து எனக்கு வர இருக்கும் தங்கையை வரவேற்க தயாராகிவிட்டேன். இப்போது எனக்கு தங்கை வந்து விட்டார். மகிழ்ச்சியாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை ஆர்யா பார்வதியை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.