மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
அதில், தலைமையை மீறி வருந்தத்தக்க சில செயல்கள் நடக்கிறது என கண்டித்தார். தொடர்ந்து,
மாவட்ட செயலாளர்கள் திமுகவின் நிர்வாகிகளையும் தொண்டர்களையும் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த தினத்தை பிரம்மாண்டமாக வருடம் முழுவதும் கொண்டாட வேண்டும்.
பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டங்களை நடத்த வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை தொடங்குங்கள், பட்ஜெட் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேருங்கள்.
பூத் கமிட்டி உறுப்பினர்களை விரைவில் எதிர் செய்யும் பணிகளை தொடங்குங்கள்.
சட்டமன்றத் தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்
என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/vx-BLJegmTw” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” allowfullscreen></iframe>Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM