கனடா பாடசாலையில் ஆசிரியர்களை கத்தியால் குத்திய மாணவன்! பயத்தில் அலறிய சக மாணவர்கள்


கனடாவின் ஹாலிஃபாக்ஸில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் மாணவர் ஒருவர் இரண்டு ஆசிரியர்களை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கத்தியால் குத்திய மாணவர்

அட்லாண்டிக் கடற்கரை நகரமான ஹாலிஃபாக்ஸில் உள்ள பாடசாலை ஒன்றில், ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது மாணவர் ஒருவர் திடீரென அவரைக் கத்தியால் குத்தியுள்ளார்.

இதனைக் கண்டு சக மாணவர்கள் பயத்தில் அலறினர். சத்தம் கேட்டு வந்த மற்றொரு ஆசிரியரையும் குறித்த மாணவர் குத்தியுள்ளார்.

மேலும் அவர் தடுக்க முயன்றதால் மாணவருக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கனடா பாடசாலையில் ஆசிரியர்களை கத்தியால் குத்திய மாணவன்! பயத்தில் அலறிய சக மாணவர்கள் | Student Stab 2 Teachers In School

@AFP

கைது செய்த பொலிஸார்

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பில் சந்தேகத்தின் பேரில் மாணவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் பாடசாலை சிறிது நேரம் பூட்டப்பட்டு, பின்னர் நாள் முழுவதும் மூடப்பட்டது. 

கனடா பாடசாலையில் ஆசிரியர்களை கத்தியால் குத்திய மாணவன்! பயத்தில் அலறிய சக மாணவர்கள் | Student Stab 2 Teachers In School



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.