கருப்பு வெள்ளை புகைப்படங்களுக்கே 20 லட்சம் லைக்ஸ் வாங்கிய சமந்தா
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டு வந்துள்ளார். அவர் நடித்து முடித்துள்ள 'சாகுந்தலம்' படத்திற்கான புரமோஷனில் பரபரப்பாக உள்ளார். தெலுங்கில் 'குஷி' படத்திலும், ஹிந்தியில் 'சிட்டாடல்' வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.
முன்பெல்லாம் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களைப் பதிவிட்டு லைக்குகளை அள்ளுவார். கடந்த பல மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சமூக வலைத்தளங்கள் பக்கம் அதிகம் வராமல் இருந்தார். இப்போது பழையபடி புகைப்படங்களைப் பதிவிட ஆரம்பித்துள்ளார். நேற்று கருப்பு வெள்ளை புகைப்படங்கள் சிலவற்றைப் பதிவிட்டிருந்தார் சமந்தா. அந்த புகைப்படங்களுக்கும் 20 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளார் சமந்தா.
ஏப்ரல் 14ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ள 'சாகுந்தலம்' படத்தைப் பெரிதும் எதிர்பார்த்துள்ளார் சமந்தா. அப்படத்தின் முதன்மைக் கதாநாயகியாக டைட்டில் ரோலில் நடித்துள்ளார்.