டெல்லி: காஞ்சிபுரம் அருகே பட்டாசுஆலை வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். வெடிவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என்றும். வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்