காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் அருகே குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது திடிரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தொழிலாளர்களுடன் ஆலையின் உரிமையாளர் சுதர்சன் (31) என்பவரும் உயிரிழந்துள்ளார். மேலும் படுகாயமடைந்த 6 பெண்கள் உட்பட 16 தொழிலாளர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து வெடி விபத்து தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தநிலையில், வெடிவிபத்து தொடர்பாக பட்டாசு ஆலையின் உரிமையாளர்களுள் ஒருவரான நரேந்திரன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.