அமெரிக்காவில் மனைவிக்கு கூழில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் பல் மருத்துவர் ஒருவர் கைதாகியுள்ளார்.
காதலியுடன் புதிய வாழ்க்கை
கொலராடோ மாகாணத்தில் ஜேம்ஸ் கிரேக் என்ற 45 வயது பல் மருத்துவரே, தமது மனைவியை கொலை செய்துவிட்டு, காதலியுடன் புதிய வாழ்க்கை தொடங்க முடிவு செய்தவர்.
Facebook (Angela Craig)/LinkedIn
இந்த நிலையில் கடந்த ஞாயிறன்று கைது செய்யப்பட்டுள்ள அவர் மீது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
மருத்துவ ரீதியாக கண்டறியமுடியாத வகையில் மனைவியை கொல்ல வேண்டும் என கிரேக் திட்டமிட்டுள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்தே மருத்துவர்கள் குறித்த பெண்மணிக்கு பரிந்துரைத்திருந்த கூழில் இவர் சயனைடு கலந்துள்ளார்.
பல் மருத்துவரின் நடவடிக்கையானது கொடூரமான, சிக்கலான மற்றும் திட்டமிடப்பட்ட கொலை என பொலிஸ் தரப்பு நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது.
புதன்கிழமை மதியத்திற்கு மேல் தமது கணவர் தயார் செய்து தந்த கூழ் குடித்த பின்னர், ஒவ்வாமை ஏற்பட்டதாக ஏஞ்சலா கிரேக் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இந்த மாதத்தில் ஏற்கனவே மூன்று முறை சந்தித்த மருத்துவரையே மீண்டும் காண சென்றுள்ளனர்.
உயிர் காக்கும் சிகிச்சைகள்
ஆனால் இந்த முறை அவரது நிலை கவலைக்கிடமாக மாறியதுடன், உயிர் காக்கும் சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஏஞ்சலா கிரேக் கடும் அவஸ்தையில் மருத்துவமனையில் படுத்திருக்கும் நிலையில், அவரது கணவர் தமது நண்பரை சந்திக்கும் பொருட்டு சென்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் மூளைச்சாவடைந்த ஏஞ்சலா கிரேக், அதுவரை அவருக்கு அளிக்கப்பட்டு வந்த உயிர் காக்கும் சிகிச்சைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், மருத்துவர் கிரேக் இணையத்தில் விஷம் வைத்து கொல்வது எப்படி என தேடியதை கண்டறிந்தனர்.
மேலும், ஏஞ்சலா கிரேக் மருத்துவமனையில் சேர்ப்பிக்கும் இரண்டு நாட்களுக்கு முன்னர் சயனைடு வாங்கியுள்ளதும் பொலிசார் உறுதி செய்தனர்.
மருத்துவர் கிரேக் ஏற்கனவே பல பெண்களுடன் தொடர்பில் இருப்பவர் எனவும், ஏஞ்சலாவிடமே இது தொடர்பில் அவர் கூறியிருந்ததையும், ஆபாசப் படங்களுக்கு அவர் இளவயதில் இருந்தே அடிமை எனவும் பொலிஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.