சமூக வலைத்தளங்களில் வைரலாகும் குடும்பம் – வருமானத்தை அதிகரிக்கும் போலி செயற்பாடா..!



ஒவ்வொரு நாளும் உலகத்தின் ஏதாவதொரு மூளையில் வித்தியாசமான பல சம்பவங்கள் பதிவாகிக் கொண்டு இருக்கின்றன.

அவை மனித வாழ்க்கையில் இதுவரை பதிவாகாத வித்தியாசமான பட்டியலில் இடம்பிடிக்கின்றன.

இப்படியொரு சூழலில் தற்போது திருமணங்கள் மற்றும் குடும்பங்களிலும் வித்தியாசமான சில விடயங்கள் பதிவாகி வருகின்றன.

இந்த பட்டியலில் விலங்குகள் முதல் உயிரற்ற பொருட்கள் வரை பலவற்றைத் திருமணம் செய்து கொண்டுள்ளனர் சில நபர்கள்.

பூனை, சுவர், ஈபிள் டவர், கற்பனை கதாபாத்திரம் என்பவற்றுடன் நடத்திக் கொள்ளப்பட்ட திருமணங்கள் தொடர்பான செய்திகள் பலவற்றை நாம் சமூக வலைத்தளங்களில் பார்வையிட்டுள்ளோம்.

பொம்மையுடன் குடும்பம் நடத்தும் இளைஞர்

அதை தொடர்ந்து தற்போது பொம்மையுடன் இளைஞரொருவர் குடும்பம் நடத்தி வரும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதேவேளை குழந்தை பொம்மையொன்றை தனது குழந்தையெனவும் அந்த நபர் தெரிவிக்கிறார்.

எனினும் இவ்வாறான விடயங்கள் தொடர்ந்தும் விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் உள்ளாகின்றமை அனைவரும் அறிந்த விடயமாக காணப்படுகிறது.

அதிலும் குறிப்பாக அனைவரினதும் கவனங்களை ஈர்ப்பதற்காகவும், இதன் மூலம் தமது சமூக வலைத்தளத்தை பின்தொடர்பவர்களை அதிகரித்து அதன் மூலம் வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்காகவும் செய்யப்படும் போலியான விடயங்கள் என சமூக வலைத்தளங்களில் பலரும் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.