சிலிண்டர் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி விருதுநகரில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. தினமும் அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரிப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து பல்வேறு வடிவங்களில் நாடு முழுவதும் போராட்டம் தொடர்கிறது.
அந்த வகையில் விருதுநகர் பகுதியில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பாண்டியன் நகர் பகுதியில், நடைபெற்ற போராட்டத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை எதிர்த்து கண்டன முழக்கம் எழுப்பினர்.
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும், குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் வாழ்வை சீரழிக்கும் போதைப்பொருளை தடை செய்ய வேண்டும், சிலிண்டர் விலையை குறைத்து மானியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.
மேலும் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது என்பதை குறிக்கும் விதமாக மாதர் சங்கத்தினர் சிலிண்டருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி சாலையில் வைத்திருந்தனர்.
newstm.in