புதுடில்லி: டில்லி அரசின் 2023-24.ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில், நிதியமைச்சர் கைலாஷ் கெலாட் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் தாக்கல்:
டில்லி அரசின் 2023- 24-ஆம் நிதிஆண்டுக்கான பட்ஜெட் நேற்று (மார்ச் 21) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில், பல்வேறு காரணங்களுக்காக மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்காததால், தாக்கல் செய்யப்ப்படவில்லை. இந்நிலையில், சில திருத்தங்களுடன் அனுப்பி வைக்கப்பட்ட பட்ஜெட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. அதன் படி, டில்லி சட்டசபையில் இன்று(மார்ச் 22) 2023 -24 ஆண்டுக்கான ரூ 78 ஆயிரத்து 800 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை நிதியமைச்சர் கைலாஷ் கெலாட் தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பின்வருமாறு:
1. டில்லி யமுனையை சுத்தம் செய்ய கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையங்களில் திறன் அதிகரிக்கப்படும்.
2. தற்போதுள்ள 57 பஸ் டிப்போக்கள் மின்மயமாக்கல் செய்யப்படும். 9 புதிய பஸ் டிப்போக்கள் கட்டுமானம் செய்யப்படும்.
3. மெட்ரோவில் நெட்வொர்க் வசதியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
4. கல்வித்துறைக்கு ரூ.16 ஆயிரத்து 575 கோடி ஒதுக்கீடு
5. சுகாத்துறை துறைக்கு ரூ. 9 ஆயிரத்து 742 கோடி ஒதுக்கீடு
6. போக்குவரத்து மற்றும் சாலை வசதி, பாலம் அமைத்தல் உள்ளிட்டவைக்கு ரூ. 6ஆயிரத்து 343 கோடி ஒதுக்கீடு.
நிதியமைச்சர் அசோக் கெலாட் பேசியதாவது: தற்போது டில்லியில் பஸ்களின் எண்ணிக்கை 7,379 ஆக உயர்ந்துள்ளது, இதுவே அதிகபட்சமாக உள்ளது. இந்ந பட்ஜெட்டில் டில்லியை சுத்தமான நகரமாக மாற்றவும், காற்று மாசுப்பாட்டை தவிர்க்கும் வகையில் அதிக திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனது மூத்த சகோதரர் ஆன மணீஷ் சிசோடியா பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement