ஆப்கானிஸ்தானில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களிலும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, பாகிஸ்தான், தஜிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும், வட இந்திய மாநில ங்களான டெல்லி, பஞ்சாப், காஷ்மீர், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு 10.20 மணியளவில் கடுமையான நில அதிர்வு உணரப்பட்டன. டெல்லியில் நில அதிர்வை உணர்ந்த மக்கள் குடியிருப்புக ளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.