டொனால்டு டிரம்ப் கைதானால்… பிரபல ஆபாசப்பட நடிகையின் கருத்தால் வெடித்த சர்ச்சை


முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கைதானால், தாம் சாலையில் இறங்கி நடனமாட இருப்பதாக பிரபல ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம்

டொனால்டு டிரம்புடனான ரகசிய உறவை பொதுவெளியில் வெளியிடாமல் இருக்க 130,000 டொலர் தொகையை நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.

2016ல் நடந்த இந்த விவகாரம் தற்போது நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டுள்ளதுடன், தாம் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என டிரம்பே சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

டொனால்டு டிரம்ப் கைதானால்... பிரபல ஆபாசப்பட நடிகையின் கருத்தால் வெடித்த சர்ச்சை | Trump Jailed Dance Down Street Stormy Daniels

@reuters

மட்டுமின்றி, அப்படியான ஒரு சூழல் ஏற்பட்டால், தமது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் குதிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை தாம் கைது செய்யப்படலாம் என டிரம்ப் கூறியிருந்த நிலையில், நியூயார்க் நகரில் அவரது ஆதரவாளர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிரது.

மேலும், டிரம்ப் கைதான அடுத்த நொடி, தாம் சாலையில் இறங்கி நடனமாட இருப்பதாக ஸ்டோர்மி டேனியல்ஸ் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
மட்டுமின்றி, இந்த வழக்கில் ஸ்டோர்மி டேனியல்ஸ் பெயர் முதன்மையான பத்திரிகைகளில் முதல் பக்கத்திலேயே வெளியாகி வருவது டிரம்ப் ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

டிரம்ப் ஆட்சி உறுதி

2024ல் டிரம்ப் ஆட்சி உறுதி என்றே அவரது ஆதரவாளர்கள், இந்த கைது விவகாரத்தை சுட்டிக்காட்டி சமூக ஊடகங்களில் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், டிரம்பை கைது செய்வதால் அவரது புகழ் அதிகரிக்கும் என எலான் மஸ்க் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் பலர் கூறி வருகின்றனர்.

டொனால்டு டிரம்ப் கைதானால்... பிரபல ஆபாசப்பட நடிகையின் கருத்தால் வெடித்த சர்ச்சை | Trump Jailed Dance Down Street Stormy Daniels

@skynews

2020ல் ஜோ பைடனிடம் வெற்றியை இழந்த டொனால்டு டிரம்ப் கடந்த நவம்பர் மத்தியில் 2024ல் ஜனாதிபதி தேர்தலுக்கான பரப்புரையை தொடங்கினார்.
பல மாகாணங்களில் டிரம்புக்கு ஆதரவு இருப்பதை, வெளிவரும் தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.

மேலும், கைது நடவடிக்கை, நீதிமன்ற விசாரணை என ஊடகங்களில் அவர் பெயர் செய்தியாக வெளிவரத் தொடங்கிய பின்னர், குறிப்பிட்ட மாகாணங்களில் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது என்றே கூறப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.