தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள வடக்கு சிவகாமிபுரம் கிறிஸ்துவ தேவாலய பாதிரியார் ஸ்டான்லி குமார் கைது செய்யப்பட்டு உள்ளார்.
கிறிஸ்துவ தேவாலயத்திற்கு வரும் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சபை மக்கள் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்திருந்த நிலையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள்ள கிறிஸ்துவ தேவாலய பாதிரியார் ஸ்டான்லி குமார் மீது வன்முறையால் பெண்களை மானபங்க படுத்துதல் பிரிவின் கீழ் பாவூர்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தலைமையிடமாக கொண்ட கத்தோலிக்க சபையில் பாதிரியாராக இருந்துவருவர் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த பெனடிக்ட் ஆன்றோ பளியர் புகாரில் கைது செய்யப்பட்டு இருந்தார்.
பிலாங்காலை சர்ச் பாதிரியாராக பொறுப்பேற்ற பெனடிக்ட் ஆன்றோ சில பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியது.
மேலும், பேச்சிப்பாறை நர்சிங் மாணவி பாதிரியார் மீது புகார் அளித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.