அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த இந்த வழக்கு இன்று சிறப்பு அவசர வழக்காக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த வழக்கில் வருகின்ற 24ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட உள்ளது.
அதன் காரணமாக வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் அனல் பறக்க தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஓ பன்னீர்செல்வம், “பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால், பொதுச் செயலாளர் பதவிக்கு நான் போட்டியிட தயாராக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கட்சியின் உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்டு, பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட அனுமதித்தால் வழக்கை திரும்பப் பெறவும் தயாராக இருக்கிறேன் என்றும் ஓபிஎஸ் சென்னை உய்ரநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சாதாரண உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பின்பற்றும் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் பதவியை பெறுவதற்காக முக்கிய பதவியை வகித்த வரை திட்டமிட்டு நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.