திண்டுக்கல்: திண்டுக்கல் வேடசந்தூரில் ராங் கால் மூலம் பேசிய பெண் மூலம் இளைஞர் கடத்தப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அப்பாஸ் என்ற இளைஞரிடம் ராங் கால் மூலம் பெண் ஒருவர் தொடர்புகொண்டு பேசி வாட்ஸ் ஆப் மூலம் குறுந்தகவல் அனுப்பியுள்ளார். ஜவுளிக் கடைக்குச் செல்லலாம் எனக் கூறி தனது நண்பர்களை அனுப்பி வைத்து இளைஞரை அப்பாஸை கடத்தி தாக்கியதாக புகார் அளித்துள்ளார். அப்பாஸை கடத்திச் சென்று தாக்கி அவரது தந்தையை தொடர்புகொண்டு ரூ.1.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.