மம்மியூர் மகாதேவன் திருக்கோயில், கேரளா மாநிலம், குருவாயூர், திருச்சூரில் அமைந்துள்ளது. கிருஷ்ணபகவான் தன் அவதாரம் முடித்து வைகுண்டம் சென்றதும் துவாரகை நகரம் கடலில் மூழ்கியது. கிருஷ்ணனால் வடிவமைக்கப்பட்ட அவரது சொந்த வடிவம் கொண்ட விக்ரகம் கடலில் மிதந்தது. அதை குரு பகவானும், வாயுவும் சுமந்துகொண்டு, பூலோகத்தில் அதை பிரதிஷ்டை செய்வதற்குரிய இடத்தை தேடி அலைந்தனர். அவர்கள் பரசுராமனால் உருவாக்கப்பட்ட கேரளப் பகுதிக்கு வந்தனர். அங்கிருந்த உருத்ர தீர்த்தக்கரையில் விக்ரகத்தை வைத்தனர். அவ்விடத்தில் சிவபெருமான் குடிகொண்டிருந்தார். தன் கோயிலின் […]