மிதுன் பழனிசாமி: எடப்பாடியார் கையில் பலே திட்டம்; அதிமுகவில் அடுத்த அனல்!

அதிமுகவில் பொதுச் செயலாளர் நாற்காலியில் கூடிய சீக்கிரமே அமர்ந்துவிட எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்துள்ளார். மறுபுறம் ஓ.பன்னீர்செல்வம் ஏற்படுத்தும் சட்ட சிக்கல்களை முறியடிக்க சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். பொதுச் செயலாளர் நாற்காலியை பிடித்த உடன் இரண்டு விஷயங்களுக்கு முக்கியத்துவம் தர திட்டமிட்டுள்ளார். ஒன்று ஜெயலலிதா பாணியில் ராணுவக் கட்டுப்பாட்டில் கட்சியை கொண்டு வருவது.

ஜெயலலிதா ஸ்டைல்தன்னை எதிர்க்கும் வகையில் அதிருப்தியாளர்கள் உருவாகாமல் பார்த்து கொள்வது. மீறி வந்தால் கட்சியில் இருந்து வெளியேற்றம் தான். இதன்மூலம் யாருடைய நாற்காலியும் உறுதியானது அல்ல. எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம் என்ற ஜெயலலிதா ஸ்டைலை முன்னெடுக்க போகிறாராம். இரண்டாவதாக கூட்டணி. 2024 மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.
​கூட்டணி வியூகம்தற்போது பாஜக உடன் உரசல் போக்கு நீடித்து வருகிறது. இருப்பினும் சில அரசியல் கணக்குகளை ஒட்டி டெல்லியின் தயவு நமக்கு தேவை என்ற எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளார். எனவே அதிமுக – பாஜக உடன் தொடர்வதையே விரும்புகிறார். இதேபோல் மற்ற கட்சிகளையும் அரவணைத்து திமுகவிற்கு எதிராக பலம் வாய்ந்த அணியை உருவாக்கி தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
​​
பலம் வாய்ந்த தலைமைஅதுமட்டுமின்றி தமிழ்நாட்டு அரசியலில் இனி அதிமுக என்றாலே எடப்பாடி பழனிசாமி தலைமை தான் நினைவுக்கு வர வேண்டும். அந்த அளவிற்கு கட்சியை பலப்படுத்தவும், வலுவான தலைமையாக திகழவும் முடிவு செய்துள்ளார். இதையொட்டி ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் முகாமில் இருக்கும் முக்கியப் புள்ளிகளை தட்டி தூக்கி வர ரத்தத்தின் ரத்தங்களுக்கு அசைன்மென்ட் கொடுத்துள்ளார். இதில் பாஜகவும் விதிவிலக்கல்ல.
​சூப்பர் பவர் அதிமுககிட்டதட்ட சூப்பர் பவர் அதிமுகவை கட்டி எழுப்ப வேண்டும் என நினைக்கிறாராம். இந்நிலையில் பெரிதாக அதிருப்திகள் எழாமல் பார்த்து கொள்ளும் வகையில் புதிதாக இரண்டு வியூகங்களை எடப்பாடி பழனிசாமி வகுத்துள்ளதாக ரத்தத்தின் ரத்தங்கள் கூறுகின்றனர். அவை, அமைப்பு ரீதியாக மாவட்டங்களை குறைக்க முடிவு செய்துள்ளார்.
​அமைப்பு ரீதியாக மாற்றம்அதிமுகவில் தற்போது 75 மாவட்டங்கள் அமைப்பு ரீதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை குறைத்து ஒருங்கிணைந்த மாவட்டமாக மாற்றி நடவடிக்கை எடுக்க இருக்கிறாராம். இதில் யாரெல்லாம் அணி மாறி வந்தவர்கள் என்பதை கவனித்து அவர்களை கட்டம் கட்டி தூக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அடுத்ததாக புதியவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி வந்துள்ளார்.​
​​
​மிதுன் கொடுத்த ஐடியாதற்போதைய சூழலில் கட்சியின் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை முக்கிய பொறுப்புகளில் சீனியர்கள் மட்டுமே பதவி வகித்து வருகின்றனர். இதில் இளைஞர்களையும் சேர்த்து புத்துழெச்சி பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க போகிறார். இந்த இரண்டு திட்டங்களின் பின்னணியில் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் பழனிசாமி வகுத்து கொடுத்த வியூகங்கள் இருப்பதாக ஒருபேச்சு அடிபடுகிறது. ஒட்டுமொத்தமாக அதிமுகவில் தொலைநோக்கு பார்வை கொண்ட திட்டங்களுடன் எடப்பாடி பழனிசாமி தயாராக இருப்பதை பார்க்க முடிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.