ஆடுகோடி, : தம்பதியை மிரட்டி, 4,000 ரூபாய் பறித்த, இரண்டு போலீஸ்காரர்கள், ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்டனர்.
பெங்களூரு கோரமங்களாவில், மூன்று மாதங்களுக்கு முன், இரவு நேரத்தில் ஒரு தம்பதி, இ – சிகரெட் புகைத்தனர். அந்த வழியாக ரோந்து சென்ற, ஆடுகோடி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய, போலீஸ்காரர்கள் மல்லப்பா வாலிகர், 35, அரவிந்த், 33, ஆகியோர், ‘பொது இடத்தில் புகை பிடித்ததற்காக, உங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உள்ளோம்’ என தம்பதியிடம் மிரட்டினர்.
அவ்வாறு செய்யாமல் இருக்க, 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று கேட்டனர். அவர்கள் கொடுக்க மறுத்தனர். அவர்களை மிரட்டி, 4,000 ரூபாய் பறித்தனர். பாதிக்கப்பட்ட தம்பதி, ‘டுவிட்டர்’ மூலம், புகார் செய்தனர்.
சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணைக்கு, தென்கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் பாபா உத்தரவிட்டார். போலீஸ்காரர்கள் இருவரும், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர்.
விசாரணை முடிவில், போலீஸ்காரர்கள் மிரட்டி பணம் பறித்தது உண்மையானது.
இதனால் இருவரையும் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து, போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement