டெல்லி: இந்திய ராணுவ வீரர்களுக்கு சிறுதானிய உணவுப் பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட பாரம்பரிய தானிய உணவுகள் தற்போது மீண்டும் வழங்கப்பட உள்ளது. 2023 சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுதானிய நுகர்வை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.