கதக், : ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட, 1.75 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் சிக்கின.
கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வாகன சோதனை தீவிரம் அடைந்துள்ளது.
கதக் அருகே முலகுந்தா சோதனைச் சாவடியில் போலீசார், வருவாய் துறையினர் இணைந்து, நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை நடத்தினர். அப்போது மும்பையில் இருந்து கதக் நோக்கி ஒரு கார் வந்தது.
காருக்குள் சோதனை செய்த போது, தங்க நகைகள் சிக்கின. நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை. 1.75 கோடி ரூபாய் மதிப்பிலான, 4 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
காரில் வந்தவர்கள், நகைக் கடைக்கு கொண்டு செல்வதாக கூறினர். ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு, நகைகளை பெற்று செல்லும்படி, போலீசார் கூறி விட்டனர்.
இதுபோல அந்த சோதனை சாவடியில், ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட, 20 லட்சம் ரூபாயும் சிக்கியது. வாக்காளர்களுக்கு வினியோகிக்க எடுத்து வரப்பட்டதா, என்று விசாரணை நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement