புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஊராட்சியின் வரவு செலவு கணக்குகளை, துண்டு பிரசுரமாக அச்சிட்டு வீடு வீடாக சென்று கொடுத்த ஊராட்சிமன்றத் தலைவரின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கே.நெடுவயல் கிராம ஊராட்சி மன்றத்தலைவராக இருக்கும் சரவணன் ஒவ்வொரு வருடமும் ஊராட்சியின் வரவு செலவு கணக்குகளை வெளிப்படையாக அறிவிப்பதாக, கிராம மக்கள் கூறுகின்றனர்.