திருவனந்தபுரம்: வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார். இன்று தமிழ்நாடு வந்துள்ள கேரள மாநில மீன்வளம், பண்பாடு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சாஜி செரியன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டலாலினை இன்று (மார்ச் 22) நேரில் சந்தித்து, வைக்கம் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன், கேரள முதலமைச்சரின் கடிதத்தையும் வழங்கினார். இதுதொடர்பாக கேரள முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், […]