ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் 650சிசி என்ஜின் பெற்ற ஸ்க்ராம்பளர் ஸ்டைல் செர்பா 650 மாடல் படங்கள் மீண்டும் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த மாடல் அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனைக்கு வரக்கூடும்.
ராயல் என்ஃபீல்டு செர்பா 650
சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் பைக் இன்டர்செப்டார் 650 மாடலை அடிப்படையாக கொண்டு பல்வேறு விதமான ஸ்கிராம்பளர் ரக பைக் மாடலுக்கு ஏற்ற பாகங்களை கொண்டுள்ளது. எல்இடி ஹெட்லைட்டை பெற்று அதற்கு பாதுகாப்பினை வழங்க கிரில் கொடுக்கப்பட்டு, ஹெட்லைட்டுக்கு மேலே ஒரு ஃப்ளை ஸ்கிரீன் உள்ளது, அதே நேரத்தில் டர்ன் இன்டிகேட்டர்களுக்கு கீழே கூடுதலாக விளக்குகள் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த பைக் இன்டர்செப்டார் 650 மாடலை அடிப்படையாக கொண்டது போல் தெரிகிறது, முனபுறத்தில் USD ஃபோர்க் மற்றும் ப்ரீலோட் அட்ஜஸ்டபிள் ட்வின் ஷாக் அப்சார்பரை பெற்றுள்ளது. இன்டர்செப்டாரை விட கூடுதலான சிறப்புகளை வழங்கும் ஃபோர்க் மற்றும் ஸ்க்ராம்ப்ளர் செர்பா 650 அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருக்கும். இந்த பைக்கில் ஆன்ரோடு மற்றும் ஆஃப் ரோடு பயன்பாடிற்கு ஏற்ற டயர்களுடன் வயர் ஸ்போக் வீல்களை கொண்டுள்ளது.
செர்பா 650 பைக்கில் 648சிசி என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 47 Hp குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 RPM சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 RPM சுழற்சியில் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.
image / bullet guru youtube