சென்னையில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 55 வயது நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் குமார் (55). இவர் அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை அறிந்த சிறுமியின் தாய் இது குறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் குமாரை கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து இது தொடர்பான வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.