இந்திய போஸ்ட் பெய்டு பயனர்களுக்காக புதிய 599
Family Postpaid Plan
ஒன்று அறிமுகம் ஆகியுள்ளது. இந்த திட்டம் இப்போது ஏர்டெல் நிறுவனத்தின் புதிய என்ட்ரி லெவல் போஸ்ட் பெய்டு திட்டமாக மாறியுள்ளது. இதற்கு முன்னதாக 999ரூ திட்டம் இருந்துவந்தது.
இதற்கு முன்னதாக 399 ரூபாய் திட்டத்துடன் கூடுதல் Addon சேவை பெற 299 ரூபாய் செலுத்தி மொத்தம் 698 ரூபாய்க்கு பயன்படுத்திய பயனர்கள் இனி ஒரே திட்டமாக 599 ரூபாய் செலுத்தி பயன்படுத்தமுடியும். இந்த புதிய 599 ரூபாய் திட்டத்தில் மாதம் 300 ரூபாய் தொகை செலுத்தி பயன்படுத்தலாம். இதனுடன் மேலும் ஒருவர் பயன்படுத்த 299 ரூபாய் செலுத்தினால் மொத்தம் 599 ரூபாய் ஆகிறது. ஆனால் இதேபோன்ற திட்டம் ஜியோ நிறுவனம் 249 ரூபாய்க்கு வழங்குகிறது. ஏர்டெல் கூடுதலாக 50 ரூபாய் இந்த திட்டத்திற்காக பெறுகிறது.
599 ரூபாய் திட்டம்
இந்த திட்டம் மூலமாக நமக்கு அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், ஒரு நாளைக்கு 100SMS, 105GB மாத டேட்டா (75GB தனிப்பட்ட டேட்டா மற்றும் 30GB Addon டாட்டா வசதி உள்ளது. இதில் நமக்கு 6 மாதங்களுக்கு Amazon prime வசதி, 1 வருடத்திற்கு Disney+Hotstar, மொபைல் பாதுகாப்பு சேவை, Xstream mobile pack, Wynk premium போன்ற வசதிகள் கிடைக்கின்றன.
சமீபத்தில் Jio மற்றும் Airtel என இரு நிறுவனங்களும் Postpaid பயனர்களை ஈர்ப்பதற்காக புதிய வகை Postpaid திட்டங்களை அறிமுகம் செய்துவருகின்றன. இந்த இரு நிறுவனங்களும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை போலவே Postpaid வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்