சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆதரவை ஜனாதிபதி பெற்றுள்ளார். எனவே, தற்போது நாம் அனைவரும் நாட்டுக்காக ஆதரவளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி மேற்கொண்டுள்ள உடன்படிக்கை தொடர்பில் இன்று (22) பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை பெற்றுக் கொள்வதற்காக எதிர்க்கட்சி என்ற வகையில் நாம் ஆதரவு வழங்க வேண்டும். இந்த உதவி கிடைப்பதையிட்டு மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த சந்தர்ப்பத்தில் நாம் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும். IMF ஆதரவைப் பெற முடியாது என்று பலராலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும், எப்படியாவது ஜனாதிபதி இந்த ஆதரவை பெற்றுள்ளார். எனவே எம்மால் முடிந்தளவு ஆதரவை வழங்கி, இந்த நாட்டை கட்டியெழுப்புவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.