Jeevitha: நாங்க எப்போ வேணாலும் ரூம்முக்கு வருவோம்.. அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்ட இயக்குநர்.. பிரபல நடிகை திடுக்!

நடிகை ஜீவிதா இயக்குநர் ஒருவர் தன்னை அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைத்தது குறித்து நடிகை ஷகீலாவிடம் வெளிப்படையாக பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

ஜீவிதாவிஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஜீவிதா. பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார் ஜீவிதா. கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிகர் கார்த்தியின் கடைசி அக்காவாக நடித்துள்ளார். தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார் நடிகை ஜீவிதா. ​ Kota srinivasa rao: ‘சொக்கத் தங்கம் ஜுவல்லரி’ கோட்டா சீனிவாச ராவ்வுக்கு என்ன ஆச்சு? தீயாய் பரவும் வீடியோ!​
சோஷியல் மீடியாசமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஜீவிதா, அவ்வப்போது தனது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். ஜீவிதாவின் ரீல்ஸ் வீடியோக்களையும் போட்டோக்களையும் பார்ப்பதற்கு என்றே ஒரு பெரும் ரசிகர் பட்டாளம் சமூக வலைதளங்களில் அவரை பின் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் நடிகை ஜீவிதா தனியார் யூட்யூப் சேனலில் நடிகை ஷகீலாவுடன் அளித்துள்ள நேர்காணல் வைரலாகி வருகிறது.
​ Mahalakshmi:ப்பா… பட்டு சேலையில் செஞ்சி வச்ச சிலை போல் இருக்கும் மகாலட்சுமி… லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!​
அட்ஜெஸ்ட்மெண்ட்அதில் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார் நடிகை ஜீவிதா. அதாவது ஜீவிதா சினிமாவுக்கு வந்த புதிதில் வாய்ப்பு தருவதாக கூறி பலரும் அவரிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்ட தகவலை கூறியுள்ளனர். சினிமாவில் ஹீரோயினாக நடிக்க சான்ஸ் தருவதாக போனில் தொடர்பு கொண்டு பேசினாராம் ஒரு பிரபலம். அப்போது பாலுமகேந்திராவின் அலுவலகம் பக்கத்தில் தான் தங்களது அலுவலகம் இருப்பதாக கூறியிருக்கிறார்.
​ Actor: பெரிய வீட்டு மருமகளை கடைசி வரை ஒருதலையாக காதலித்த லவ் ஃபெயிலியர் நடிகர்!​
எங்களுக்கு ஓகேஇதைக் கேட்ட நடிகை ஜீவிதாவும் அந்த அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரிடம் பேசிய படக்குழுவினர் படத்தில் நீங்க தான் இரண்டாவது ஹீரோயின் என்றும் முதல் ஹீரோயின் நல்ல பிரபலமானவர் என்றும் கூறியுள்ளனர். பின்னர் எங்களுக்கு ஓகே, இனி நீங்க தான் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து சொல்ல வேண்டும் என கூறியுள்ளனர்.
​ திருமணத்திற்கு பிறகு ‘அதை’ கைவிட்ட மகாலட்சுமி!​
ரூமுக்கு வருவோம்இதைக் கேட்ட ஜீவிதா அட்ஜஸ்மெண்ட்னா என்ன என கேட்டுள்ளார். அதற்கு அந்த இயக்குனர், என்னை நீ அட்ஜஸ்ட் பண்ண வேண்டும்மா.. கேமராமேன், தயாரிப்பாளர், மேனேஜர் ஆகியோருடனும் அட்ஜஸ்ட் பண்ண வேண்டும். நாங்க எப்போ வேண்டுமானாலும் ரூமுக்கு வந்துட்டு போவோம் என கூறியுள்ளனர். தஞ்சாவூர் பக்கத்துல 15 நாள் இது நடக்கும் என்றும் இதுக்கெல்லாம் சம்மதம் என்றால் எதிர்பார்க்காத அளவுக்கு சம்பளம் தருவதாக தெரிவித்துள்ளனர்.
​ https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/he-is-the-reason-my-family-came-to-this-situation-dhanush-emotional-statement/articleshow/98856608.cms​
அழக்கூடாதுமேலும் அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறியுள்ளனர். இதனைக் கேட்ட ஜீவிதாவுக்கு அழுகை வந்து விட்டதாம். ஆனால் அவர்களுக்கு முன்பு அழக்கூடாது என்று முடிவு செய்த ஜீவிதா, யோசித்து சொல்கிறேன் என கூறிவிட்டு வீட்டிற்கு வந்து விட்டாராம். இதனை நடிகை ஷகீலாவின் பேட்டியில் உருக்கமாக கூறியுள்ளார் ஜீவிதா.
​ Meena:இரண்டாம் திருமணமா? நடிகை மீனா விளக்கம்!​
Jeevitha

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.